மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-19T00:15:50+05:30)

நாகர்கோவிலில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணப் பெருமாள் (வயது 52). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகில் உள்ள கன்னிவிநாயகர் வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது யாரோ மர்ம ஆசாமிகள் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுபற்றி அவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்்தார்.

இதேபோல் தென்தாமரைக் குளத்தை சேர்ந்தவர் அகிலன் (36). இவர், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளை அவசர சிகிச்சைப்பிரிவு முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மோட்டார் சைக்கிள்களையும் தேடி வருகிறார்கள்.

--------


Next Story