மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னப்பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40). வெள்ளி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். காய்கறிகள் வாங்கி விட்டு வந்து பார்த்த போது, இவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story