மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 29). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் என்ஜின் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளை கொடும்பலூர் சத்திரத்தில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story