மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஆச்சிமடம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றதாக தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தார். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (19) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story