மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்தனர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கணபதி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதமன் (வயது 56). இவர் கடந்த மாதம் 18-ந்தேதி மயிலாடுதுறை கூறைநாடு வண்டிப்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் கவுதமன் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.