மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
முக்கூடலில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காமராஜர் தெருவை சேர்ந்த பூவையா மகன் செல்வராஜா (46) என்பவர் ரமேசின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜாவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
Related Tags :
Next Story