திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; வாலிபர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; வாலிபர் பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் குப்பன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 30).

இவர் கடம்பத்தூர் பகுதியில் இருந்து தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் திருப்பாச்சூர் சாலையில் செல்லும்போது எதிரே வந்த லாரி அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் லேசான காயங்களுடன் இருந்த பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு, பின்னர் உயிரிழந்த சாந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story