மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; வாலிபர் பலி
x

தூசி அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21), கல்குவாரியில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பரான மாங்கால் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் இருவரும் ஊருக்கு திரும்பினர். மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த வேனும் மோதிக்கொண்டன. இதில் திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார். கணேசன் காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story