மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா மகன் சேர்மராஜ் (வயது 29), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கல்லூத்தில் இருந்து முத்துகிருஷ்ணபேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முத்துகிருஷ்ணபேரி அருகில் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே முத்துகிருஷ்ணபேரியை சேர்ந்த லட்சுமணன் மகன் பாலமுருகன் (38) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சேர்மராஜ் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story