மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 வாலிபர்கள் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்:  3 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

வல்லநாடு:

வல்லநாடு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி இவரது மகன் வேல்பாண்டி (வயது 28). இவர் ஜிம் மாஸ்டராக உள்ளார். மேலும் வல்லநாடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகராஜன் (28) சலூனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7மணியளவில் இவர்கள் இருவரும் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே

வசவப்பபுரத்திலிருந்து வல்லநாடு விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பக்கப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் சுடலைமணி (30) வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் வேல்பாண்டி, ் மகாராஜன், சுடலைமணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story