மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியானார்.
புதுக்கோட்டை
கீரனூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47), விவசாயி. இவர் கீரனூரில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். குன்றாண்டார் கோவில் சாலையில் சென்றபோது ஒடுகம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் மற்றும் லேசான காயம் அடைந்த அய்யப்பனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story