மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தனியார் நிதிநிறுவன ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிதிநிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் செல்வம் (வயது 34). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் ஆசனூர் - கொட்டையூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பரிந்தல் பகுதியை சேர்ந்த சீனு (45) என்பவரின் மோட்டார் சைக்கிளும், செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சீனு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.