மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.

பெரம்பலூர்

திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29), டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது நண்பனின் திருமணத்திற்காக அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது க.மேட்டுதெரு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயம் அடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story