மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; மது குடிக்க பணம் தராததால் தந்தை ஆத்திரம்


மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; மது குடிக்க பணம் தராததால் தந்தை ஆத்திரம்
x

களக்காடு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பணம் கேட்டு தகராறு

களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு வடக்கு தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 20). டிரைவராக உள்ளார். இவரது தந்தை முருகன் மது அருந்தும் பழக்கமுடையவர் ஆவார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு அவர் தனது மனைவி சண்முகத்தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்த பேச்சிமுத்து, மது அருந்த பணம் இல்லை என்று தந்தையிடம் கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு

அதன் பின்னர் அதிகாலையில் முருகன் தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பேச்சிமுத்து, அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோரது மோட்டார் சைக்கிள்கள் மீது துணிகளை போட்டு தீ வைத்தார். இதில் மோட்டார் சைக்கிள்கள் பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்த பேச்சிமுத்து வெளியே வந்து பார்த்தார். அப்போது, மோட்டார்சைக்கிள்களுக்கு தனது தந்தை தீ வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் மோட்டார்சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி பேச்சிமுத்து, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.


Next Story