வாகன ஓட்டிகள் அச்சம்


வாகன ஓட்டிகள் அச்சம்
x

தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் அருகே சாலையோரத்தில் திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால் உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் அருகே சீனிவாசன் பிள்ளை சாலையோரத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் சாலையின் வளைவு பகுதியில் மூடியின்றி திறந்த நிலையில் இருக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மூக்கை மூடியபடி நிற்க கூடிய சூழல் நிலவுகிறது. மேலும், திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகாலினால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் வடிகாலுக்குள் விழுந்துவிடும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story