ஊட்டி ரெயில் நிலையம் அருகில் வர்ணம் பூசாத வேகத்தடையால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ஊட்டி ரெயில் நிலையம் அருகில் வர்ணம் பூசாத வேகத்தடையால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ரெயில் நிலையம் அருகில் வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் தினசரி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி ரெயில் நிலையம் அருகில் வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் தினசரி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

விபத்தை குறைக்க வேகத்தடைகள்

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகளை சரியாக கடைபிடி்காததால் விபத்து அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே இது போன்ற சூழ்நிலையில் விபத்து ஏற்படுவதை தடுக்க பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளை தடுக்க அமைத்த வேக தடைகளை சரியான வழிமுறைகளை பின்பற்றாமல் அமைத்தால் அவையை விபத்துக்கும் காரணமாகி விடுகின்றன.

அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் மைசூர் செல்லும் சாலையில் ஊட்டி ரெயில் நிலையம் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையும் பல்வேறு நேரங்களில் விபத்துக்கு காரணமாக மாறிவிடுகிறது. இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

அடிக்கடி விபத்து

ரெயில் நிலையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் அதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது, நல்ல விஷயம் தான். ஆனால் அந்த வேகத்தடை சாலையில் இருப்பதே சரவர தெரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த வேகத்தடையால் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வேகத்தடைகளை இரு சக்கர வாகனஓட்டிகள் கடந்து செல்லும் போது பெரும் அவதி அடைகின்றனர். விளக்குகள் வெளிச்சம் இல்லாத போது அதில் வாகனங்கள் ஏறி நிலைதடுமாறி கீழே விழுந்து வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். மேலும் வேகத்தடை இருப்பதற்கான அடையாளங்கள் தெளிவாக இல்லை.

எனவே அந்த இடத்தில் வேகத்தடை மீது வர்ணம் பூசி, பிரதி ஒளிப்பான் விளக்குகள் அமைத்து அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரின் பல்வேறு இடங்களிலும் இதுபோல் வேகத்தடைகள் உள்ளன. அங்கும் விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story