போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
x

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலை நகரமும் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

மேலும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவற்றினாலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை நகரில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

மதியம் திருவண்ணாமலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

மதியத்தில் போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் பஸ் நிலையம் அருகில் இருந்து வந்த வாகனங்கள், சின்னக்கடை தெருவில் இருந்து வந்த வாகனங்கள், மத்தலாங்குளத்தெருவில் இருந்த வந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

எனவே இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story