சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x

மருங்கூர்- நெய்க்குப்பை இடையே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த சாலையை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

மருங்கூர்- நெய்க்குப்பை இடையே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த சாலையை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவா்கள்

திருமருகல் ஒன்றியம் மருங்கூர், நெய்க்குப்பை ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளை இணைக்கும் சாலை வழியாக மருங்கூர், எரவாஞ்சேரி, துறையூர், கண்ணமங்கலம், கொட்டாரக்குடி பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் திருமருகல் கடைத்தெரு, வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகிறார்கள்.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நாகை, காரைக்கால், நன்னிலம், திருமருகல் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலை வழியாக சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

குண்டும் - குழியுமான சாலை

மருங்கூர்-நெய்க்குப்பை இடையே உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகிறாா்கள். பொதுமக்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி மாணவ- மாணவிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருங்கூர்-நெய்க்குப்பை இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story