பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கூடலூர் மாக்கமூலாவில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் மாக்கமூலாவில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூடலூர் மாக்கமூலா பகுதியில் வன அலுவலர் அலுவலகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பொதுமக்களின் வீடுகள் உள்ளது. அதே பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்துக்கு செல்லும் சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் பயன்படுத்த முடியாத வகையில் சாலை உள்ளது.
எனவே, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் இருப்பதால் தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் வருவதால் மோசமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதனால் சாலையை புதுப்பிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் மாக்கமூலா பகுதியில் பல ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகமும் உள்ளதால் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். ஆனால், பழுதடைந்த சாலையால் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.