செஞ்சி பகுதியில் திடீர் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
செஞ்சி பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
விழுப்புரம்
செஞ்சி,
வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் பனி மூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது தை மாதத்திலும் பனிப்பொழிவு காணப்படுவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. செஞ்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பனி குறைந்திருந்த நிலையில் நேற்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் உள்ள எந்த ஒரு பொருளும் கண்ணுக்கு தெரியாத வகையில் பனிமூட்டம் மறைத்தது. இதனால் கடும் அவதி அடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுக்கொண்டே மெதுவாக ஊர்ந்து சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. இதேபோல் மேல்மலையனூர் பகுதியிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story