மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

திசையன்விளை அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் மரணம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு பெட்டைகுளத்தை சேர்ந்தவர் வேதமுத்து. இவருடைய மனைவி கனி (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் 2-வது மகன் ஜெகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

முதல் மகன் சென்னையில் உள்ளார். வேதமுத்துவும் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த கனி இறந்துபோன தனது மகன் நினைப்பாகவே இருந்து வந்துள்ளார். உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.

தாய் தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கனி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைபாா்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சோகம்

திசையன்விளை அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story