எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் வாலிபா்களுக்கு கால்பந்து போட்டி


எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் வாலிபா்களுக்கு கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் வாலிபா்களுக்கு கால்பந்து போட்டி

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்ஸில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பணிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ராணுவம் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னி பாத் திட்டம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது இதில் இளைஞர்களை ராணுவத்தை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக கால்பந்து போட்டி முதன்முறையாக குன்னூர் அருகேயுள்ள சோலாடா மட்டம் கிராமத்தில் நடைபெற்றது. போட்டியை லெப்டினன்ட் கர்னல் ராஜிவ் சர்மா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர் இதில் வேற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கபட்டனர்.


Next Story