முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம்


முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம்
x

முதுகுளத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி, துணைத்தலைவர் வயன பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 7-வது வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் பேசும் போது, முதுகுளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வார சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் கூறுகையில் கட்டிடம் திறப்பது குறித்து அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கி உள்ளதாகவும் கூடிய விரைவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தை முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக திறக்கபட உள்ளதாக அமைச்சர் கூறியதாக தெரிவித்தார். 10-வது வார்டு கவுன்சிலர் சேகர் பேசும் போது, முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் முழுவதும் கிழக்கு தெரு பகுதியில் வருவதால் அதனை பிரித்து முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 3-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் பேசும் போது, அரசு மருத்துவமனை முதல் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீரை தெருக்களில் திறந்து விடுவதாகவும் புகார் தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக செயல்அலுவலர் கூறினார்.


Related Tags :
Next Story