நெல்லையில் முகரம் பண்டிகை


நெல்லையில் முகரம் பண்டிகை
x

நெல்லையில் முகரம் பண்டிகை நடந்தது.

திருநெல்வேலி

முகரம் பண்டிகையையொட்டி நெல்லை டவுனில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சாவை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் வந்து உப்பு, மிளகு, மாவு, சர்க்கரை, பூ, மாலை வாங்கி கொடுத்து நேர்ச்சை செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரவில் நெல்லை டவுனில் இருந்து குறுக்குத்துறை தாமிரபரணி ஆறு வரை சப்பர பவனி நடந்தது. இதன் முன்பு இளைஞர்கள் சிலம்பம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகளை விளையாடி சென்றனர்.


Next Story