செல்லியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா


செல்லியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
x

செல்லியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே கருக்காக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லியம்மன், அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற மே 3-ந் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி முளைப்பாரி எடுப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து கருக்காக்குறிச்சி, கரு.வடதெரு, கரு.தெற்கு தெரு, பட்டத்திக்காடு, வாணக்கன்காடு பெரியவாடி, கண்ணியான் கொல்லை, வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர்கோவில் திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story