துறையூர் கருமாரியம்மன் கோவிலில் முள்படுகளம் நிகழ்ச்சி
துறையூர் கருமாரியம்மன் கோவிலில் முள்படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி
துறையூர், ஆக.13-
துறையூரில் உள்ள தேவி ஜெயசக்தி கருமாரி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தெப்பக்குளத்தில் இருந்து சக்தி அழைத்தல், பூங்கரகம், பால்குடம், தீர்த்தக் குடம், அலகு குத்துதல், சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முள்படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முள்படுக்கையில் படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகமும், சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.
Related Tags :
Next Story