காங்கயத்தில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காங்கயத்தில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காங்கயம்காங்கயம், கரூர் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனைகள் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 3 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டை, 6 பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 13 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். முன்னதாக இந்த மருத்துவ முகாமில் இலவச சிறப்பு வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
I