மும்பை விமானம் 3½ மணி நேரம் தாமதம்


மும்பை விமானம் 3½ மணி நேரம் தாமதம்
x

மும்பை விமானம் 3½ மணி நேரம் தாமதமாக சென்றது

மதுரை


மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில், தினமும் ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த விமானம் மதியம் 12.50 மணிக்கு வந்துவிட்டு, பின்னர் மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று அந்த விமானம் சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் சென்னை மற்றும் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். மாலை 4.30 மணிக்கு அந்த விமானம் மதுரை வந்தது. பின்னர் மாலை 5 மணியளவில் அந்த விமானத்தில் பயணிகள் புறப்பட்டு சென்றனர்.


Next Story