மும்பை-தூத்துக்குடி வாராந்திர ரெயில்மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
மும்பை-தூத்துக்குடி வாராந்திர ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயிலை மத்திய ரெயில்வே அறிவித்து இயக்கி வருகிறது. இந்த ரெயில் ஜூலை மாதம் முழுவதும் வாராந்திர ரெயிலாக இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு மாதம் ரெயில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் (01143) வருகிற 4, 11, 18, 25 மற்றும் 01.09.23 (வெள்ளிக்கிழமை தோறும்) ஆகிய நாட்களிலும், தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரெயில் (01144) வருகிற 6, 13, 20, 27 மற்றும் 03.09.23 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 3.40 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டு இருப்பதால், மத்திய ரெயில்வே மற்றும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.