நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்


நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்
x

நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் துப்புரவு பணியை மேற்கொள்ள 176 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், திடீரென 15 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணிச்சுமை அதிகரிப்பதை கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களிடம் குப்பையை எடை போட்டு, அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும். நகராட்சி சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்புரவு பணியாளர்கள் பஸ் நிலையம் மற்றும் விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னர் இது பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட தலைவர் இந்திரஜித், செயலாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் அதிகாரிகளிடம் பேசினர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் கீதா. மைக்கேல்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று அவர்கள் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.


Next Story