வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி ஆய்வு
வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி ஆய்வு செய்தார்.
வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாகும். எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிகவளாகங்களில் தூய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அவை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட ரங்காபுரம், வ.உ.சி.நகர் பகுதிகளில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வீட்டின் உரிமையாளர்களிடம் தினமும் வீடுகளுக்கு வந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கிறார்களா, சாலை மற்றும் தெருவில் சேகரமாகும் குப்பைகள், மண் உள்ளிட்டவற்றை அகற்றி தூய்மையாக வைக்கிறார்களா என்று கேட்டறிந்தார்.
வீடுகள்தோறும் தினமும் குப்பைகளை பெற்றால் பொதுமக்கள் சாலைகளில் குப்பைகள் கொட்ட மாட்டார்கள். எனவே தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் வீடுகளில் குப்பைகள் பெற வேண்டும் ் தூய்மை பணியாளர்களுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது வேலூர் மாநகர்நல அலுவலர் கணேஷ், 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.