தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டம்


தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டம்
x

தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஓய்வு அறை கட்ட செயல் அலுவலர் குகன் கொண்டு வந்த முன்மொழிவு ஒரு மனதாக ஏற்கப்பட்டது. தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வண்டல் குளம் மேம்பாடு செய்தல், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அழகு மாரியம்மன் கோவில் தெருவில் புதிய கழிவறை, குப்பை அள்ள 4 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் மற்றும் நகர் பகுதியில் சோலார் மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story