பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்


பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-14T00:30:53+05:30)

பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

திண்டுக்கல்


வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நிருபாராணி தலைமை தாங்கினார். துணை தலைவர் மலைச்சாமி, பேரூராட்சி செயலர் முரளி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் வரவேற்று பேசினார்.

இதில் வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த அனைத்து வரிவிதிப்பு தாரர்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், 4-வது வார்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், 2-வது வார்டு லக்கன் தெருவில் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.Next Story