பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
அவினாசி
அவினாசி சேவூர் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைக்கு தீர்வு காண வேண்டி அவினாசி பேரூராட்சி 3-வது வார்டுஉறுப்பினர் தங்கவேல் தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அவினாசி சூளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வடிகால் வசதி இல்லை. எனவே அங்குள்ள கழிவுநீரை சிந்தாமணி பஸ் நிறுத்தம் எதிரே குடியிருப்பு நிறைந்த பகுதியில் விடப்படுகிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து பேருராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, தி.மு.க.நகர செயலாளர் திராவிட வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
------------------