நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

திருப்பத்தூரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் 147 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், தூய்மைப் பணியாளர்களிடம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போனில் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story