வாடகை செலுத்தாத கடைக்கு 'சீல்'
வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’
காங்கயம்
காங்கயம் பஸ் நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடையை எடுத்து நடத்தி வருபவர் கடந்த 4 மாதங்களாக கடை வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலுவையில் உள்ள தொகை ரூ.37 ஆயிரத்தை கடை உரிமையாளர் கால அவகாசம் கொடுத்தும் செலுத்தாததால் கடையை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் நேற்று பூட்டி, சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறும்போது " நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல் வைக்கப்படுவதோடு, குடிநீர்க்கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என பலமுறை அறிவித்திருந்தோம். உங்கள் வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாகச் செலுத்தி, நகராட்சிக்கு ஒத்துழைக்கவும், என்றார்.