பதாகைகளை அகற்றியதாக பேரூராட்சி வாகனம் சிறைபிடிப்பு
பதாகைகளை அகற்றியதாக பேரூராட்சி வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதிகளில் கடைகள் முன்பு சாலை ஓரங்களில் பதாகைகள், போர்டுகள் கை்கப்பட்டுள்ளது. மேலும் சாலை ஓரங்களில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறும் விபத்துகளும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் கடை போர்டுகள், பதாகைகளை டிராக்டர் மூலம் அள்ளி சென்றனர். அப்போது பல கடைகாரர்கள் சேர்ந்து முன் அறிவிப்பு ஏதும் கொடுக்காமல் சாலை ஓரமாக இடையூறு இல்லாமல் இருந்த பதாகைகளையும் அள்ளி சென்றது ஏன் என கேட்டு டிராக்டரை ரோட்டிலேயே நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இடையூறு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை திருப்பி கொடுத்தனர்.
Related Tags :
Next Story