முரசொலி மாறன் பிறந்த நாள் விழா
முரசொலி மாறன் பிறந்த நாள் விழா நடந்தது.
முன்னாள் மத்திய மந்திரி முரசொலிமாறனின் 89-வது பிறந்தநாள் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் மற்றும் முத்துக்கடை பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனின் உருவ படங்களுக்கு, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நகர செயலாளர் பூங்காவனம், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா, நகர துணை செயலாளர் குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.