இளம்பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்ெகாலை செய்த கள்ளக்காதலன்
கணவர், 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த பெண்ணை கள்ளக்காதலனே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பாகுல் (வயது 35). அட்டை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 12 வயதில் | மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணக்குமார் (40) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர்.
சுகன்யாவின் காமமோகம் தாலிகட்டிய கணவரையும், பெற்ற குழந்தைகளையும் கண்ணை மறைத்தது. இதனால் சுகன்யா தனது கணவர் மற்றும் மகன், மகளை உதறி தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
பின்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கருமத்தம்பட்டியில் வசித்து வந்தார். அங்கிருந்து சுகன்யா பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று சுகன்யாவுக்கும், கள்ளக்காதலன் சரவணக்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுகன்யா சரவணக்குமாரிடம் சண்டையிட்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சரவணக்குமார் தானே கொண்டு விடுவதாக கூறி சுகன்யாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அடித்துக்கொலை
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் அவினாசியை அடுத்து தெக்கலூர் குப்பை கிடங்கு அருகே வந்தது. அப்போது சரவணக்குமார் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சுகன்யாவின் தலையில் பலமாக அடித்ததில் சம்பவ இடத்திலேயே சுகன்யா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரவணக்குமாரை தேடி வருகின்றனர். சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன், 2 குழந்தைகளை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் வந்த பெண்ணை கள்ளக்காதலனே இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.