மனைவியை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு


மனைவியை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு
x
திருப்பூர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே மனைவியை கொன்ற தொழிலாளியை 6 மாத சிகிச்சைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துப்புரவு தொழிலாளி கொலை

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 62). இவரது மனைவி பூங்கொடி (55). இவர் அருகில் உள்ள நூல் மில்லில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குருநாதனுக்கு உடல் பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு பூங்கொடி வீட்டுக்கு வந்துள்ளார், அப்போது திடீரென வீட்டில் பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் உள்ள வீட்டினர் சென்று பார்க்கும்போது பூங்கொடியின் பின் தலையில் குருநாதன் கடப்பாரையால் அடித்துவிட்டு கடப்பாறை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பூங்கொடி ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குருநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் அவரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் குருநாதன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் காப்புடன் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறையில் அடைப்பு

அங்கு கடந்த 6 மாதமாக குருநாதன் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் பூரண குமணடைந்ததால் நேற்று முன்தினம்அவரை வெள்ளகோவில் போலீசார் அழைத்து வந்து நேற்று காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் . நீதிபதி பிரவீன் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குருநாதனை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story