தங்கை கணவர் கழுத்தை நெரித்து கொலை


தங்கை கணவர் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தங்கை கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

அண்ணியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தங்கை கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கட்டிட தொழிலாளி

பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டம் டர்கி தாலுகாவுக்கு உட்பட்ட கிஷான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சினேஜ் பஸ்வான். இவரது மகன் சிவிஜ்குமார் (வயது22). கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காலஸ்திபுரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இவருடைய சகோதரர் மனோஜ். இவர் இறந்த நிலையில் பீகாரில் வசிக்கும் அவரின் மனைவியான தனது அண்ணி சர்சத்தி தேவியுடன் சிவிஜ்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சிவிஜ்குமாரின் தங்கை மனிஷாதேவியும், அவரது கணவர் பங்கஜ் பஸ்வானும் (25) கண்டித்து உள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த சிவிஜ்குமார் தங்கை கணவர் என்று கூட பார்க்காமல் பங்கஜ்பஸ்வானை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவரை கட்டிட வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவிஜ்குமார் பீகாரில் இருந்து ஓசூருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு சிவிஜ்குமார், பங்கஜ்பஸ்வானை தாக்கி கழுத்தை நெரித்து உள்ளார்.

இதில் மூச்சு திணறி பங்கஜ்பஸ்வான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்கஜ்பஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

மேலும் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிவிஜ்குமாரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது அண்ணியுடன் இருந்த கள்ளத்தொடர்பை தங்கை கணவர் கண்டித்ததால் ஓசூருக்கு வேலைக்கு அழைத்து வந்து கொன்றதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவிஜ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story