தீவட்டிப்பட்டியில்வாலிபர் கத்தியால் குத்திக்கொலைசிறுவன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை


தீவட்டிப்பட்டியில்வாலிபர் கத்தியால் குத்திக்கொலைசிறுவன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
சேலம்

ஓமலூர்:

தீவட்டிப்பட்டியில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சிறுவன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிமெண்டு கடை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நடூர் காட்டுவளவு குறிஞ்சிப்பாடி பகுதி சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 31). இவரும், காடையாம்பட்டி சந்தைப்பேட்டை செட்டியார் காடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (36) என்பவரும் சேர்ந்து தீவட்டிப்பட்டி பகுதியில் கம்பி, சிமெண்டு மொத்த வியாபார கடை நடத்தி வந்தனர்.

இவர்களது கடையில் பீகார் மாநிலம் பேகுசிரா பகுதியை சேர்ந்த சீட்ஸ் சந்திரயாதவ் மகன் சோபித் ( 18), அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் சந்தோஷ், பிரேம்குமார் கடையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டினர்.

கத்திக்குத்து

பின்னர் வீட்டுக்கு கிளம்பியபோது சோபித் மற்றும் 15 வயது சிறுவன் தங்களுக்கு பணம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு சந்தோஷ் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சந்தோஷ் குமாரை பயங்கரமாக குத்தினர். இதனை பார்த்த பிரேம்குமார் தப்பி ஓடினார். அவரையும் 2 பேர் சேர்ந்து துரத்தினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சோபித் மற்றும் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினர். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த சந்தோஷ் குமார் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுமக்கள் பிடித்தனர்

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சோபித் மற்றும் 15 வயது சிறுவனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட சந்தோசுக்கு இலக்கியா என்ற மனைவியும், 4 வயதில் திவ்யன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story