வாலிபர் குத்திக்கொலை


வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் படேல் தெரு சேகர்நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32). கொத்தனார்.

நேற்று முன்தினம் இரவு கனகராஜ் ஜீவாநகர் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது, குமாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் துரை (28) ஆட்டோவில் அங்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார்.

உடனே அவர், கனகராஜை பார்த்து ஏன் என்னை முறைக்கிறாய்? என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த துரை தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கனகராஜை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து துரை அங்கிருந்து தப்பிவிட்டார்.

சாலைமறியல்

உயிருக்கு போராடிய கனகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆட்ேடா டிரைவர் கைது

கனகராஜின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பரமக்குடி தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பின்பு கனகராஜின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story