பள்ளிபாளையம் அருகேமூதாட்டி அடித்துக்கொலை


பள்ளிபாளையம் அருகேமூதாட்டி அடித்துக்கொலை
x

பள்ளிபாளையம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

மூதாட்டி அடித்துக்கொலை

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பில்லுமடை காடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவருடைய கணவர் சின்னசாமி இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் முனிராஜ் (42).

மூதாட்டி பழனியம்மாள் அதே பகுதியில் தனது விவசாய நிலத்தில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். மேலும் ஆடு, மாடுகளை வளர்த்தும், பால் கறந்து விற்பனையும் செய்து வந்தார்.

மூதாட்டியிடம் தினமும் பால் வாங்குபவர்கள், மூதாட்டி வரவில்லை என நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது 5 கேன்களில் பால் இருந்தது. மேலும் குடிசைக்கு அருகில் பழனியம்மாள் தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரது மகன் முனிராஜுக்கும், பேரன்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, நாமக்கல் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜூவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் அது யாரையும் பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story