போலீஸ் ேதடிய வாலிபர் கைது


போலீஸ் ேதடிய வாலிபர் கைது
x

நீடாமங்கலம் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

நீடாமங்கலம்,;

நீடாமங்கலம் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளவையகளத்தூர் கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(வயது29). விவசாய கூலித்தொழிலாளி. அதே தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற மாதவன்(27). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் திடீரென அரிவாளால் ஜெய்சங்கரை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயமடைந்த ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதைத்தொடர்ந்து மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிகண்டனை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஜெய்சங்கர் தனது ரேஷன் கார்டை மணிகண்டன் வீட்டில் அடகு வைத்திருந்ததும், ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டை மணிகண்டன் அம்மாவிடம் ஜெய்சங்கர் கேட்டதால், ஜெயசங்கருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் மணிகண்டனை நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொரடாச்சேரியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் நீடாமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story