மன்னார்குடி கோர்ட்டில் 3 பேர் சரண்
தஞ்சை தொழிலாளி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மன்னார்குடி கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.
தஞ்சை தொழிலாளி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மன்னார்குடி கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.
படுகொலை
தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே உள்ள புலவர் நத்தம் குடியானத் தெருவை சேர்ந்தவர் ஜவகர் மகன் ராஜ்மோகன் (வயது39). இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அருகே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கும் இவருடைய உறவினர்களுக்கும் இடையே நிலம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த ராஜ்மோகனை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று படுகொலை செய்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் அவருடைய உடலை வீசி சென்றனர்.
3 பேர் சரண்
இதுதொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ராஜ்மோகன் கொலை வழக்கு தொடர்பாக வலங்கைமான் அருகே உள்ள சடையங்கால் முனியூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (37), அம்மையப்பன் அருகே உள்ள காவனூர் பகுதியை சேர்ந்த விவேக் (29), புதுச்சேரி ரெட்டியார்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (34) ஆகிய 3 பேரும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை நீதிபதி அமீர்தீன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.