சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி திடீர் சாவு


சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி திடீர் சாவு
x

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி திடீரென இறந்தார்.

சேலம்

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 61). இவரை கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேவராஜிக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story