வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 2:55 AM IST (Updated: 4 July 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

அம்மாப்பேட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை,

அம்மாப்பேட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டிக்கொலை

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள மெலட்டூர் பகுதி, வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்ற இளங்கோ(வயது31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்காக, அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் இளங்கோ நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ கொலை தொடர்பாக அம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஆனந்தபாபு(வயது30), பிரவீன்(24), திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியை சேர்ந்த மதன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளங்கோ ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததாவும் இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், இளங்கோ கொலை வழக்கில், தப்பிஓடிய சேர்மாநல்லூர் பகுதியை சேர்ந்த பாபு, தினேஷ், வடபாதி உடையார்கோவில் பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story