போலீஸ் தேடிய வாலிபர் கைது


போலீஸ் தேடிய வாலிபர் கைது
x

பட்டுக்கோட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தாக்குதல்

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது43). சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த இவர் விவசாய வேலைகளை கவனித்து வந்தார். ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் முத்துச்செல்வம்(24). சம்பவத்தன்று காலை 7.30 மணிக்கு முத்துச்செல்வனின் தந்தை சின்னப்பன் குணசேகரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த குணசேகரன் என்னுடைய தென்னந்தோப்பில் எப்படி ஆடு மேய்க்கலாம்? என்று கேட்டார். இதனால் குணசேகரனுக்கும் சின்னப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சின்னப்பன் மகன் முத்துச்செல்வம் அருகில் கிடந்த கட்டையை எடுத்து குணசேகரன் தலையிலும் உடலிலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முத்துசெல்வத்தை போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமறைவாக இருந்த முத்துசெல்வத்தை 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.


Next Story