தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


தொழிலாளிக்கு கொலை   மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த பகுதியில் தொழிலாளி ஒருவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வேல்முருகன் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story